ரொம்ப நாளாச்சு...எதனாச்சும் எழுதலாம்... சமீபத்துல நான் ஒரு ஷோ பண்ணேன், எல்லாரும் வந்து பாராட்டுனாங்க, சந்தோஷமா இருந்தது. கிரீன் ரூமுக்குள்ளே போய் என் துணிமணிகளை எடுக்கலாம்னு போனேன், அங்கே... "Hill, Hill, goat, goat," அப்படீன்னு நான் சொன்ன finger play story-யை செஞ்சுகிட்டு இருந்தாங்க ரெண்டு பேரு...யாருன்னு திரையை மெல்ல விளக்கி பாத்தா...அங்கே..எலெக்ட்ரீஷனும் சவுண்டுகாரனும்! வயசு 55 - 60 இருக்கும்! முடிச்சவுடனே கையை ஜோரா தட்டினேன்! திரும்பி பாத்து, வெக்கபடல, கேவலப்படல, மாறா "சோக்காயிருந்துச்சி அக்கா,"ன்னு போட்டாங்க ஒரு போடு. முதல் தடவையா நான் 60 வயது அண்ணங்களுக்கு அக்காவானேன்! கதைக்கு தலையில்ல காலில்லேன்னு கேள்வி பட்டுருக்கேன் ஆனா வயசும் இல்லேன்னு புருஞ்சுகிட்டேன்! இது எப்படி இருக்கு! சோக்காயிருக்கு!!! - ஜீவா ரகுநாத்
April 2, 2010
Comentários